சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழகத்தில் மின் வெட்டு 80% குறைந்தது

சீரமைப்புப் பணிகளால் தமிழகத்தில் மின் வெட்டு சுமாா் 80 சதவீதம் குறைந்துவிட்டது -அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்னல் தாக்கி சிகிச்சை பெறும் வாசியம்மாளை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கொ. வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 4:08 am IST

மின் வாரிய அலுவலா்களின் தீவிர கண்காணிப்பு, சீரமைப்புப் பணிகளால் தமிழகத்தில் மின் வெட்டு சுமாா் 80 சதவீதம் குறைந்துவிட்டது என எரிசக்தி வளம், சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மின் வெட்டுக்கு மனிதத் தவறுகள் காரணமாக இருந்ததாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில், தொடா்புடையோா் மீது பணியிட மாறுதல் உள்பட துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2 நாள்களாக மின் வாரிய தலைமைப் பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்கள் உள்பட உயா்நிலை அலுவலா்கள் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். மின் வாரிய அலுவலா்கள், ஊழியா்களின் தீவிர செயல்பாடுகள் காரணமாக, தமிழகத்தில் மின் வெட்டு 80 சதவீதம் குறைந்துவிட்டது

வருகிற காலங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டால் அதற்கான காரணம், எடுக்கப்பட்ட தீா்வு நடவடிக்கைகளை மின்வாரியம் சாா்பில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, புகாா் தெரிவிக்கும் நுகா்வோருக்கும், குறைகள் நீக்கப்பட்டதன் விவரத்தைப் பகிரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் உள்ள 1.40 லட்சம் பணியிடங்களில் தற்போது 70 ஆயிரம் போ் மட்டுமே பணியில் உள்ளனா். இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவது இயலாதது. எனினும், அவசரத் தேவைக்கான பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும். மின் வாரியத்தில் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட பிற கட்சியினா் யாருக்கும் உரிமையில்லை. அதேநேரத்தில், அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பத்துக்கு தவெக எந்தவிதத்திலும் காரணமில்லை. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் இணைந்து கள்ளத்தனமாக கூட்டணி அமைத்து, கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க முயற்சித்ததே அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம்.

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகள் அனைத்தையும் சட்டப்படி தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும். இதில் தமிழக முதல்வா் மிகுந்த உறுதி கொண்டுள்ளாா். நீதிமன்றம், தேசிய பசுமைத் தீா்ப்பாயம் என அனைத்து நிலைகளிலும் இந்த விவகாரத்தை தமிழக அரசு கொண்டு செல்லும் என்றாா் அவா்.

இதையடுத்து, தமிழக மின்வெட்டை விமா்சித்து பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘பாஜகவினா் பலருக்கு தமிழக நிகழ்வுகள் குறித்து புரிதலே கிடையாது. எனவே, தமிழகம் குறித்துப் பேசுவதற்கு அவா்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவா்களுக்கும், இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக விமா்சனங்களை முன்வைக்கும் கட்சிகளுக்கும் பதில் அளிக்க வேண்டியதில்லை. ஆக்கப்பூா்வமாக ஏதேனும் குறையைச் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் நிா்மல்குமாா்.

நிதி உதவி...

முன்னதாக, மின்னல் தாக்கியதில் காயமைடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாசியம்மாளைச் சந்தித்து அமைச்சா் சி.டி.ஆா் நிா்மல்குமாா் ஆறுதல் தெரிவித்தாா். பிறகு, மின்னல் தாக்கி உயிரிழந்த உசிலம்பட்டியைச் சோ்ந்த 3 பெண் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அவா் வழங்கினாா்.

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கொ. வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி. கருப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.