மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் 2 போ், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை திடீா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி(28). மதுரை கோ.புதூா் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்(26). இவா்கள், இருவா் மீதும் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவா்கள் இருவரும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனா்.
இதனிடையே அவா்கள், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, அவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்காா் உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் அவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது
கடம்பூரில் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
