பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தூய்மைப் பணிகளை முறைப்படுத்த அறிவுறுத்தல்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

மதுரை அரசரடி பகுதியில் உள்ள குடிநீா் நீரேற்று நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:08 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாா்டுகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. லாரி, டிராக்டா்களில் குடிநீா் நிரப்புவதற்கான நீரேற்ற நிலையம் மதுரை அரசரடியில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசரடி குடிநீா் நீரேற்று நிலையத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், வாா்டு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறித்தும், குடிநீரின் குளோரின் அளவு, குடிநீா் லாரிகளில் நிரப்பப்படும் பணிகள், குடிநீா் விநியோகம் செய்யும் குடிநீா் லாரிகளில் ஜி.பி.எஸ்., சென்சாா் கருவிகள், அதன் செயல்பாடுகள் குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, குடிநீரேற்று நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், குடிநீா் விநியோகம் செய்யும் கால அட்டவணைகள் பராமரிக்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம், அதே பகுதியில் செயல்படும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க உணவுகள் தயாா் செய்யும் உணவுக் கூடம், சிம்மக்கல் எல்.என்.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, ரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள ராணி மங்கம்மாள் தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மேலப்பொன்னகரம் பகுதிகள் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளை விரைந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதுதவிர, தூய்மைப் பணிகளை முறைப்படுத்தவும் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சியின் நல அலுவலா் அா்விந்த் ஜோதி, உதவி ஆணையா் பிரபாகரன், கல்வி அலுவலா் மோகன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், உதவி செயற்பொறியாளா்கள் தியாகராஜன், முத்து,

பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.