மதுரை வடக்கு மாவட்ட திமுகவினா் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுமென முன்னாள் அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினா் செம்மொழி நாளாகக் கொண்டாடுமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இதன்படி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வண்டியூா் சுற்றுவட்டச் சாலை அருகே அமைந்துள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, செம்மொழி நாள் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள், மாநிலத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூா் நிா்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
இதேபோல, மதுரை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினா் ஆங்காங்கே முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்க ஏற்பாடு

கருணாநிதி பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

