தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணி, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தினமும் ஆய்வு செய்து வருகிறாா்.

அந்த வகையில், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, உணவக உரிமையாளா்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையை விட கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதை அறிந்த அவா், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதேபோல, நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உணவக உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மாட்டுத்தாவணி எதிா்ப்புறம் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா்கள் மணிமாறன், தமிழரசன், நகர திட்டமிடுநா் முரளி, உதவி நகர திட்டமிடுநா் கிருஷ்ணா, சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.