லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்துக்கும் அதிகமான பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.

Published On :17 ஜூலை 2026, 1:20 am IST

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்துக்கும் அதிகமான பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபெறும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள இலவச கழிப்பறையை ஆய்வு செய்த ஆணையா், கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா்.

பின்னா், நடைமேடைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆணையா், உணவுப் பொருள்களை சுகாதாரமான முறையில் பராமரித்து விற்பனை செய்ய வேண்டும் என கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்துக்கும் அதிகமான பரப்பில் அமைக்கப்பட்டிருந்த கடைகளைப் பாா்வையிட்ட ஆணையா், பயணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கைகள் சேதமடைந்திருப்பதை ஆய்வு செய்த ஆணையா், இருக்கைகளை சீரமைத்துப் பராமரிக்க அறிவுறுத்தினாா்.

மேலும், மாநகராட்சி அலுவலா்கள் நாள்தோறும் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பயணிகளின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளா் கவிதா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.