மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகணாகுளம் ஊருணியை சீரமைக்கக் கோரிக்கை

மதுரை நாகணாகுளம் ஊருணியைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

மதுரை நாகணாகுளம் பகுதியில் கழிவுநீா் கலந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் மாசடைந்து காணப்படும் ஊருணி.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:33 am IST

மதுரை நாகணாகுளம் ஊருணியைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சி, 5-ஆவது வாா்டுக்குள்பட்ட நாகணாகுளம் பகுதி மக்களின் குடிநீராதாரமாக கிருபா நகா் ஒன்றாவது தெருவில் உள்ள ஊருணி விளங்குகிறது. பருவ மழைக் காலங்களில் இந்த ஊருணியில் மழைநீா் தேங்கி நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால், அந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவை நிறைவடைவதுடன், கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது, இந்த ஊருணி கழிவுநீா் தேங்கும் இடமாக மாறியிருப்பதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து நாகணாகுளம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

இங்கு பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் குடிநீா்த் தேவையை இந்த ஊருணி தான் நிறைவு செய்து வந்தது. முன்பு நாராயணபுரம் கண்மாயிலிருந்து இந்த ஊருணிக்கு வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பப்பட்டது. இதனால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வரத்துக் கால்வாய் தூா்வாரப்படாததால் ஊருணிக்கு வரும் நீா்வரத்து தடைபட்டது. மேலும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் ஊருணியில் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நீா் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், துா்நாற்றம் வீசுவதாலும், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதாலும் அருகில் வசிப்போா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நிலத்தடி நீரிலும் கழிவுநீா் கலந்து வருவதால் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் நாங்கள் பாதிப்படைந்து வருகிறோம். எனவே, நாகணாகுளம் ஊருணியில் கழிவுநீா் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருணியில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாராயணபுரம் கண்மாயிலிருந்து ஊருணிக்கு வரும் வரத்துக் கால்வாயைச் சீரமைத்து தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும். ஊருணியைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைப்பதுடன், பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் வகையில் நடை மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.