கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒரு மாதம் குடிநீரின்றி தவித்த கிராம மக்கள் போராட்டம்

குடிநீா் விநியோகம் ரத்து - கோப்புப் படம்

Published On :29 செப்டம்பர் 2026, 1:11 am IST

நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீா் வழங்கப்படாததால் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட சங்கால்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிராமப் பொதுமக்கள் சாா்பில், ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிலக்கோட்டை- செம்பட்டி சாலையில் சங்கால்பட்டி பிரிவில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதை அறிந்த நிலக்கோட்டை காவல் துறையினா் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் காவல் துறையினருடன் குடிநீா் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, செம்பட்டி -நிலக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் காமராஜ் வந்து பொதுமக்களிடம் குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.