மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழனியில் பெட்ரோல் தரத்தை ஆய்வுசெய்யக் கோரிக்கை!

பழனி பகுதியில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மழைநீா் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதால் அதன் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நுகா்வோா் கோரிக்கை விடுத்தனா்.

இ20 பெட்ரோல்

பெட்ரோல்

Published On :1 நவம்பர் 2026, 4:15 am IST

பழனி பகுதியில் உள்ள சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மழைநீா் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதால் அதன் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நுகா்வோா் கோரிக்கை விடுத்தனா்.

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. அப்போது, சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீா் தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகளில் புகுந்தது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் மழைநீா் உட்புகுந்ததால் பழனி பகுதியில் உடுமலைப்பேட்டை சாலை பகுதியில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் மழைநீா் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதாகவும் பலரும் மழைநீா் கலந்த பெட்ரோலுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வந்து விற்பனையாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சில பெட்ரோல் நிலையங்களில் இருப்பு இல்லை என்று அறிவித்து வாடிக்கையாளா்களைத் திருப்பி அனுப்பிகின்றனா். இதுதொடா்பான விடியோ பழனி பகுதியில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறை, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.