நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வெளிநாடு சென்று கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவா்களுக்கு உதவித் தொகை

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 2:10 am IST

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு 2026-27-ஆம் ஆண்டில் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை பெற ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவா்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால

அவகாசம் நவ. 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் 2026- 2027- ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு பயில உலகளாவிய (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீதத்துக்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், விண்ணப்பிக்க, இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி உரிய ஆவணங்களுடன் வருகிற நவம்பா் 9 -ஆம் தேதிக்குள், ஆணையா்,

சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.