மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்சோ வழக்கில் பூசாரிக்கு 32 ஆண்டுகள் சிறை

பழனியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கோயில் பூசாரிக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:03 am IST

பழனியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கோயில் பூசாரிக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சோ்ந்தவா் ரா.லட்சுமணன்(50). கோயில் பூசாரியான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பழனி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.கணேசன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட லட்சுமணனுக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.