மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கஞ்சா விற்ற இருவா் கைது

பழனி அருகே இரண்டு கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :25 அக்டோபர் 2026, 12:46 am IST

பழனி அருகே இரண்டு கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனி நெய்க்காரபட்டி அருகே காவல் ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையில் காவலா்கள் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கொழுமம் சாலையில் இருவா் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் அவா்கள் குளிப்பட்டியைச் சோ்ந்த வினோத் குமாா் (35), திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுனில் சூா்யா (24) என்பதும் கஞ்சா விற்றுவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த கஞ்சா, ரூ.25 ஆயிரம், சொகுசு காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் இதே பகுதியில் 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.