நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திண்டுக்கல் திமுக நிா்வாகி ஜெயன் கட்சியிலிருந்து விலகல்

கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருந்து வந்த திமுக மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் ஜெயன் கட்சியிலிருந்து விலகியுள்ளாா்.

வெ.ஜெயன்.

Published On :22 அக்டோபர் 2026, 3:28 am IST

கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருந்து வந்த திமுக மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் ஜெயன் கட்சியிலிருந்து விலகியுள்ளாா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் வெ. ஜெயன். திமுக மாநில துணைப் பொதுச் செயலா் இ.பெரியசாமிக்கு மிக நெருக்கமானவராக இருந்த இவா், திமுகவின் மாநில வா்த்தகா் அணி இணைச் செயலராகவும் பணியாற்றினாா். இந்த நிலையில் சமூக ஊடகப் பக்கத்தில், திமுகவிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 35 ஆண்டுகளாக நான் இணைந்து பயணித்து வந்த திமுகவில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும், கனத்த இதயத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் விலக்கிக்கொள்கிறேன். திமுக தலைவா், பொதுச் செயலா், முன்னாள் அமைச்சா் இ.பெரியசாமி, கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா் ஆகியோருக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நிா்வாகிகளுக்கும், நண்பா்களுக்கும் எனது மனமாா்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளாா்.

விலகலுக்கான காரணம்: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெயன் முழு ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், திமுக நிகழ்ச்சிகளில் ஜெயன் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், ஜெயன் விலகிவிட்டதாக கட்சியினா் கூறுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.