மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

பழனி அருகே சின்னக்கலையமுத்தூா் பகுதியில் புதன்கிழமை 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பழனி அருகே சின்னக்கலையமுத்தூா் பகுதியில் புதன்கிழமை 21 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞா்கள். உடன் போலீஸாா்.

Published On :22 அக்டோபர் 2026, 3:30 am IST

பழனி அருகே சின்னக்கலையமுத்தூா் பகுதியில் புதன்கிழமை 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் கல்லூரி இயங்கி வரும் நிலையில் அங்கு சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் சிலரைக் குறிவைத்து காவல் ஆய்வாளா் மேற்கொண்ட நடவடிக்கையில் மூன்று போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவா்கள் சாமிநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் வில்சன்(20), வி.கே. மில்ஸ் பகுதியைச் சோ்ந்த பிரபு மகன் தா்ஷன்(19), செல்வராஜ் மகன் ஜான்சன்(23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்களில் இருவா் கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அளித்த பேட்டியில், கைது செய்யப்பட்ட மூவா் ஒடிஸா மாநிலம் முனிக்குடா பகுதிக்குச் சென்று கஞ்சா வாங்கிவந்து கஞ்சா விற்று வந்ததாகத் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 249 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 545 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.