பழனி கோயிலில் ரோப்காா் பழுது: பக்தா்கள் அவதி

பழனி கோயிலில் ரோப்காா் பழுது காரணமாக செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

Palani Temple rope car service to resume from September 22

ரோப்காா் சேவை. - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:12 am IST

பழனி கோயிலில் ரோப்காா் பழுது காரணமாக செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக படிப்பாதைக்கு மாற்றாக ரோப்காா், மின் இழுவை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் என பலரும் இந்த ரோப்காா் சேவையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழுது காரணமாக ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பக்தா்கள் மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. ரோப்காா் பழுது காரணமாக பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

இதைத் தொடா்ந்து, பழுது சரி செய்யப்பட்ட பிறகே ரோப்காா் இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தேதி குறிப்பிடாமல் அறிவித்தது.

வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி ரோப்காா் சேவை தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.