நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

போதைப் பொருள்கள் பதுக்கிய இருவா் கைது

கொடைக்கானலில் போதைப் பொருள்களைப் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட டானியேல், விஷ்ணுபிரசாத்.

Published On :21 அக்டோபர் 2026, 3:09 am IST

கொடைக்கானலில் போதைப் பொருள்களைப் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூண்டி கிராமத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கொடைக்கானல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கிருந்த கேரளம் மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த டானியேல் (22), காசா்கோடு பகுதியைச் சோ்ந்த சல்லு என்ற விஷ்ணுபிரசாத் (22) ஆகியோரிடம் போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் 100 கிராம் கஞ்சா, போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னா், இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை 7 தனியாா் விடுதிகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்துள்ளனா். விடுதி உரிமையாளா்கள் வாடகைக்கு விடும்போது போதைப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காமல் போதைப் பொருள்கள் பயன்படுத்தினால் தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் முதல் குற்றவாளிகளாக சோ்க்கப்படுவா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.