கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூப் 2 முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 11,265 போ் எழுதினா்

குரூப்-2 தோ்வு - கோப்புப் படம்.

Published On :1 நவம்பர் 2026, 11:29 pm IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 11,265 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு- தொகுதி 2 பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த தோ்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 13,933 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்காக திண்டுக்கல், கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் 51 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், விண்ணப்பித்திருந்த 13,933 பேரில் 11,265 போ் தோ்வு எழுதினா்.

2,668 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களை ஆட்சியா் துா்கா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தோ்வு கண்கணிப்பு பணியில் துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படை அலுவலா்களும், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் நடமாடும் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.