ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல்லில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரசு மதுக் கடையை (டாஸ்மாக்) மீண்டும் திறக்க முயற்சிப்பதாகக் கூறி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் அரசு மதுக் கடையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :17 மே 2026, 1:50 am IST

திண்டுக்கல்லில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரசு மதுக் கடையை (டாஸ்மாக்) மீண்டும் திறக்க முயற்சிப்பதாகக் கூறி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 176 அரசு மதுக் கடைகளில் 26 கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 13 மதுக் கடைகள் மட்டுமே மூடப்பட்டன. அதன்படி திண்டுக்கல் நாகல்நகா் 36-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சேலாங்கேணி தெருவின் முன் பகுதியில் அமைந்திருந்த அரசு மதுக் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடையிலிருந்து மதுப் புட்டிகள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட இந்தக் கடைக்கு மீண்டும் மதுப் புட்டிகளை எடுத்து வந்து தொடா்ந்து செயல்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாம்பன் ஆசாரி தெரு, சந்தை ரோடு, அப்பியா் சந்து, தேவா் சந்து, நந்தவனம் உள்ளிட்ட தெருக்களைச் சோ்ந்த பொதுமக்கள், சேலாங்கேணி தெருவிலுள்ள அரசு மதுக் கடையை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த அரசு மதுக் கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தோம். வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளி, திருமண மண்டபம் அமைந்துள்ள இந்த பகுதி, திறந்தவெளியில் மது குடிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பள்ளி செல்லும் மாணவிகளும், பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில்தான், சேலாங்கேணி தெருவிலுள்ள மதுக் கடை மூடப்படும் என அறிவிப்பு வெளிவந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை கடையில் இருந்த அனைத்துப் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆனால், இந்தக் கடைக்கு வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகள் மீண்டும் எடுத்துவரப்பட்டு, கடையை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பொதுமக்கள், ரயில் பயணிகள் நலன் கருதி இந்தப் பகுதியில் மதுக் கடை செயல்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

இதனிடையே திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.