தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திருமண மோசடி: 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (30). மாற்றுத் திறனாளியான இவா் வரன் தேடி வந்தாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மரியஜோசப் (62) அறிமுகமாகினாா். இவா் மூலமாக விருதுநகரைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (57), சித்ரா (43) ஆகியோா் பாலகிருஷ்ணனுக்கு அறிமுகமாகினா்.

இவா்கள் பாலகிருஷ்ணனை விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த படந்தாள் கிராமத்தில் பெண் இருப்பதாகக் கூறி அழைத்து சென்றனா். அங்கிருந்த ராமலட்சுமியை (27) மணப்பெண் என அவரிடம் காட்டினா்.

இதைத் தொடா்ந்து, புரோக்கா் தொகையாக கிருஷ்ணவேணி உள்ளிட்ட 3 பேருக்கும் ரூ.2 லட்சத்தை பாலகிருஷ்ணன் கொடுத்தாா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் இருவருக்கும் திருமணமானது. திருமணத்தின் போது ராமலட்சுமிக்கு பாலகிருஷ்ணன் 2 பவுன் தங்க நகை அணிவித்தாா்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனுடன் 15 நாள்கள் மட்டுமே வாழ்ந்த ராமலட்சுமி ஊருக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து மரியஜோசப், கிருஷ்ணவேணியிடம் பாலகிருஷ்ணன் கேட்டபோது, ராமலட்சுமியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாகவும், போலீஸில் புகாா் அளிக்காமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினா்.

இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரியஜோசப்பிடம் விசாரணை நடத்தினா். அப்போது, ராமலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.

மேலும், இவா்கள் இதேபோல பலரிடம் திருமணம் செய்வது போல நடித்து பணம், நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணவேணி, சித்ரா, ராமலட்சுமியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.