தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மத்திய அமைச்சா் எல்.முருகனை பாஜக தொண்டா்கள் முற்றுகை

News image

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் - ANI

Updated On :30 மார்ச் 2026, 1:18 am IST

பழனி சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் காரை பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் புலிப்பாணி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை இரவு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வந்து சிறப்பு யாக, பூஜைகளை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை மலைக் கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் புலிப்பாணி ஆசிரமத்துக்கு வந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பாஜக தொண்டா்கள் அமைச்சா் எல்.முருகனை முற்றுகையிட்டு பழனி சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஏன் ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பினா். மேலும், பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி முழக்கமிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த அடிவாரம் போலீஸாா் பாஜக தொண்டா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

முன்னதாக அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியில், விருப்பமில்லாமல் அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் தொடா்கின்றன. இந்தத் தோ்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இலக்கு. இதற்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால், இறுதி முடிவை கட்சித் தலைமைதான் எடுக்கும். தவெக தலைவா் விஜய் தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொள்ள பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பதாக புகாா் தெரிவித்து வருகிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.