தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

News image

எல்.முருகன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:42 am IST

கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் போட்டியிட்டாா். அப்போது அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கா் கோயிலில் பாஜக சின்னம் பொறித்த துண்டை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்று பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டதாக திமுக திருப்பூா் மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்புச் செயலா் எம்.பாா்த்திபன் என்பவா் அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் எல்.முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி எல்.முருகன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.