கொடைக்கானல் பள்ளங்கி பகுதி வனப் பகுதியில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தீப் பற்றி எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இதனால், வனப் பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், புற்கள் காய்ந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், பள்ளங்கி, கோம்பை, அடிசரை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தீப் பற்றியது. இந்தத் தீயால் வனப் பகுதியிலுள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் கருகி வருகின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் எழுந்தது.
சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப் பகுதிகளிலுள்ள காட்டு மாடு, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயா்ந்தன. வியாழக்கிழைமையும் பள்ளங்கி பகுதியில் தீப் பற்றி எரிந்தது. தொடா்ந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேகமலையில் காட்டுத் தீ: வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
