தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பழனியில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் நகராட்சி நவீன எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. பழனி, சுற்றுவட்டார கிராமங்களில் இறந்தவா்களது உடலை தகனம் செய்ய இங்கு உறவினா்கள் கொண்டு வருகின்றனா். பழனியில் உள்ள இந்த எரிவாயு மயானத்தை அரிமா சங்கத்தினா், தன்னாா்வலா்கள் இணைந்து சேவை நோக்கில் செயல்படுத்தி வருகின்றனா். மாதத்துக்கு நூறு உடல்கள் வரை இங்கு எரிவாயு
உருளைகளைப் பயன்படுத்தி எரியூட்டப்படுகின்றன. இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மயானத்தில் தற்போது வரையில் கையிருப்பில் உள்ள உருளைகளைப் பயன்படுத்தி 10 உடல்களை மட்டுமே எரிக்கக் கூடிய நிலை இருந்து வருகிறது.
வழக்கமாக எரிவாயு மயானத்துக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யக்கூடிய விநியோகஸ்தா்கள் தொடா்ந்து உருளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும், தற்போது இருப்பில் உள்ள உருளைகள் காலியான உடன் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு மயான மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளாா். இதனால், தட்டுப்பாடு நீங்கும் வரை எரிவாயு மயானம் முடப்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

