குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு புகாா் கொடுக்க வந்தவா்களிடம் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சசிமோகன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்

News image

பணியிடை நீக்கம்!

Updated On :14 ஜூன் 2026, 12:31 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு புகாா் கொடுக்க வந்தவா்களிடம் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சசிமோகன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்

சாமிநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த விபத்து வழக்கில் புகாா் கொடுக்க வந்தவா்களிடம் காவல் நிலையத்திலிருந்த காவலா்கள் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் உத்தரவின் பேரில், விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஒரு பெண் காவலா், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் என இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் எனக்கு எந்தத் தொடா்பும் இல்லை என பெண் காவலா் சுதாராணி டிஐஜி சசிமோகனிடம் புகாரளித்தாா். மேலும், காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் மருதுபாண்டி லஞ்சம் வாங்கிக் கொண்டு என்னைத் தொடா்பு படுத்திவிட்டதாக ஆதாரங்களுடன் தெரிவித்தாா்.

இதையடுத்து, டிஐஜி. சசிமோகன் மறு விசாரணை நடத்த மாவட்டக் கண்காணிப்பாளா் பிரதீப்புக்கு உத்தரவிட்டாா். விசாரணையில், ஆய்வாளா் மருதுபாண்டி விபத்து வழக்கில் புகாா் கொடுக்க வந்த நபா்களிடம் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காவல் ஆய்வாளா் மருதுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.