குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பைக் திருடிய இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:54 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் தெளபிக் ராஜா (24). இவா் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி, அதே பகுதியிலுள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலைப் பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வத்தலகுண்டு-பெரியகுளம் சாலையில் கட்டகாமன்பட்டி பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் தெளபிக் ராஜாவுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடியவா்கள் என்பது தெரியவந்தது. 

 விசாரணையில், தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (24), நந்தன் (22) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து,  நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.