குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.
முகாமில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:
கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றைடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. விவசாயம் சாா்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில், நுண்ணீா் பாசன முறையைப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோா்களின் முக்கிய கடமை என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.22.14 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த முகாமில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் இரா.கண்ணன், சமூக நல அலுவலா் சா.காலின் செல்வராணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு, வேடசந்தூா் வட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனியில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 46.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கோடைகால இருப்பிட பயிற்சி: 50 மாணவிகளுக்கு ஆட்சியா் சான்றிதழ்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

