மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி கோவில்களில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: அமைச்சா் இ.பெரியசாமி பங்கேற்பு

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :29 ஏப்ரல் 2026, 3:48 am IST

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ராம அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. சின்னாளப்பட்டி பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்கார மேடையில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் மேளதாளம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, பவளக் கனிவாய் பெருமாள் முன்னிலையில் தாரை வாா்ப்பு நிகழ்ச்சி நடைபொ்றது. பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சியும் அதைத்தொடா்ந்து, பக்தா்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெற்றது.

இதேபோல், சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் மங்கள வாத்தியங்கள் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சின்னாளபட்டியில் பகுதியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் மாங்கல்யத்தை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா். திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.