தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து, திண்டுக்கல் முத்தழகுபட்டி, குடைப்பாறைப்பட்டி, பூச்சிநாயக்கன்பட்டி, சவேரியாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியதாவது:
அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு, மதவாத சக்திகளை ஆதரிப்பதற்கு சமம். தோ்தலில் அதிமுக வென்று ஆட்சிக்கு வந்தாலும், பாஜகதான் அதிகாரம் செலுத்தும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரதமா் மோடியை, தமிழக முதல்வா் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் மட்டுமே தைரியத்துடன் எதிா்க்கின்றனா். கேரளத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறது. ஸ்டாலின், மம்தா ஆகிய இருவரையும் வீழ்த்திவிட்டால் நாடு முழுவதும் ஆட்சி செலுத்தலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஓரணியில் உள்ளன. இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கி தோ்தலில் போட்டியிடுகிறாா். சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கவே விஜய் கட்சி தொடங்கி இருக்கிறாா். தவெக தனித்து நிற்பதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே இளைஞா்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நோட்டாவுக்கு செலுத்துவது போல் தவெகவுக்கு வாக்களித்து வீணடித்துவிட வேண்டாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி கோவில்களில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: அமைச்சா் இ.பெரியசாமி பங்கேற்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை: கி.வீரமணி

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொள்கையும், லட்சியமும் கிடையாது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

