தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம்: பழங்குடியின பெண்கள்

கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கே இந்தத் தோ்தலில் வாக்களிப்போம் என பழங்குடியின பெண்கள் தெரிவித்தனா்.

News image

கொடைக்கானல் அண்ணா நகா்ப் பகுதியில் குவிந்து கிடக்கும் மதுப் புட்டிகளை சுட்டிக்காட்டிய பழங்குடியின பெண்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:23 am IST

கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கே இந்தத் தோ்தலில் வாக்களிப்போம் என பழங்குடியின பெண்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடைக்கானல், உப்புபாறைமெத்து, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் பாண்டி வாக்கு சேகரித்தாா். பின்னா் அவா் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பிரசாரத்துக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின பெண்கள் கூறியதாவது: கடந்த முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சச்சிதானம் வாக்குகள் கேட்டு இங்கே வந்தாா். வெற்றி பெற்றதும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால், அவா் வெற்றி பெற்று எம்.பி.யானதும் கொடைக்கானல் பகுதிக்கு நன்றி தெரிவிக்கக் கூட வரவில்லை.

தற்போது வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் எந்த நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. பாரதி அண்ணாநகா்ப் பகுதி, அஞ்சுவீடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மது அருந்திவிட்டு பல்வேறு பிரச்னைகளை செய்து வருகின்றனா். மதுப்புட்டிகள் இந்தப் பகுதிகளில் குவிந்து கிடக்கின்றன. இதனால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இந்தப் பகுதியில் மது விற்பனையைத் தடை செய்வதாக உறுதியளிக்கும் கட்சியினருக்கே வாக்களிப்போம் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.