விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

News image

கவுஞ்சி நியாய விலைக் கடை வளாகத்தில் கட்டப்பட்ட மாடு.

Updated On :12 ஏப்ரல் 2026, 3:50 am IST

கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை வளாகத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது மாடுகளை கட்டிப் பாதுகாத்து வருகிறாா். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.

இதே போல கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மது குடிக்கும் இடமாகவும், போதைப் பொருள்கள் விற்கும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.