தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கொடைக்கானல் எம்.எம். தெருவில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:27 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொடைக்கானல் எம்.எம். தெருவில் கடந்த 73 ஆண்டுகளாக புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலம் இருந்து வருகிறது. இந்த வழிபாட்டுத் தலத்தை வருவாய்த் துறையினா் அகற்றுவதற்கு புதன்கிழமை வந்தனா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், வருவாய்த் துறையினா் அந்த வழிபாட்டுத் தலத்தை அகற்ற முயன்றனா்.

இதைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் அசோக், காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் உள்ளிட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பேரவைத் தோ்தல் முடியும் வரை புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலத்தை அகற்ற மாட்டோம் என வருவாய்த் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.