தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காவிரி உபரி நீரை ஆத்தூா் கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் இ.பெரியசாமி உறுதி!

காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து, ஆத்தூா் தொகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உறுதியளித்தாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :2 ஏப்ரல் 2026, 4:34 am IST

காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து, ஆத்தூா் தொகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உறுதியளித்தாா்.

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பிள்ளையாா்நத்தம் மகா முத்து மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு தோ்தல் பிரசாரத்தை அமைச்சா் தொடங்கினாா்.

பிள்ளையாா்நத்தம், அண்ணாமலையாா் ஆலை ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைத்து வருகிறது. பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில் 41 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 250 நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 81 லட்சம் பேருக்கு மகளிா் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு தோ்தல் முடிந்த பிறகு மே மாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆத்தூா் ஒன்றியத்தில் 2000 கலைஞா் கனவு இல்லம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

வைகை அணையிலிருந்து நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் தொகுதிகளுக்கு ரூ. 700 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப் பகுதி விவசாயிகளை நலன் கருதி, காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தப் பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு ஆத்தூா் கூட்டுறவு கலைக் கல்லூரி அருகில் ‘டைட்டல் பாா்க்’ அமைக்கப்பட்ட உள்ளது. புதுகோடாங்கிபட்டி அருகே மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில், போட்டித் தோ்வுக்கான டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் கிழக்கு முருகேசன், மேற்கு ராமன், தெற்கு ராஜேந்திரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.