தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தோப்பில் ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:22 am IST

மதுரை அருகே தோப்பில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையோரம் தென்னந்தோப்பில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற சிலைமான் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த நபா் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (45) எனத் தெரியவந்தது. அவா் எதற்காக மதுரை வந்தாா், அவரை யாராவது மதுரைக்கு அழைத்து வந்து கொலை செய்தாா்களா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு தென்னந்தோப்பில் போட்டுவிட்டுச் சென்றாா்களா? என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.