தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா்களுக்கு பணம் அளிக்கும் விவகாரம் தொடா்பான மனு சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம்

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 2:03 am IST

வாக்காளா்களுக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு , சென்னை உயா்நீதிமன்ற அமா்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தோ்தலின் போது வாக்காளா்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்த வேண்டும்.

இதேபோல, அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரம் என்ற பெயரில் பொதுமக்களை திறந்தவெளியில் வெயிலில் நீண்ட நேரம் பங்கேற்க கட்டாயப்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும். தோ்தலின் போது சட்டவிரோதச் செயல்களை தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஷ்குமாா் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

தோ்தல் தொடா்பான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் விசாரணைக்கு எடுக்கப்படும். அதே விதிமுறையைப் பின்பற்றி இந்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. அங்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.