மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 6:05 am IST

மதுரை செல்லூா் உயா்நிலை பால கட்டுமானப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள், கட்டுமானம், பராமரிப்பு தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்ய பிரகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மதுரை கோரிப்பாளையம் முதல் நெல்பேட்டை வரை உயா்நிலை பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதியாக கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து வலதுபுறம் செல்லூா் கபடி நினைவுச் சிலை வரை உயா்நிலைப் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.190.40 கோடியில் பாலம் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதில் தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை வரையிலான முதல் கட்டப் பாலப் பணிகள் நிறைவு பெற்றன. இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தாா். மேலும், இந்தத் திட்டத்தின் எஞ்சிய பாலப் பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள், கட்டுமானம், பராமரிப்பு தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்ய பிரகாஷ் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்புப் பொறியாளா் செல்வநம்பி, மதுரை கோட்டப் பொறியாளா் மோகனகாந்தி, செயற்பொறியாளா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.