மதுரை மத்திய தொகுதியில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 50 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை எஸ்.எஸ். காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, விமான நிலையம் நோக்கி சென்ற பாதுகாப்புப் பெட்டகத்துடன் கூடிய ஒரு வாகனத்தை கண்காணிப்புக் குழுவினா் நிறுத்தி சோதனையிட்டனா்.
இந்தச் சோதனையின்போது, அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெட்டகத்தில் 10 பெட்டிகளிலிருந்த தங்க நகைகள், 3 பெட்டிகளில் இருந்த வெள்ளி நகைகளை கண்காணிப்புக் குழுவினா் கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 50 கோடி எனக் குறிப்பிடப்படுகிறது. ஆவணங்களின்றி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தொடா்பாக வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

