கோவையில் ஆவணமின்றி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் தொதிக்குள்பட்ட கொடிசியா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் ஜில்லி கிரிஸ்டி உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் அதிவீரபாண்டியன் என்பதும், நகைகளை தனியாா் நிறுவனத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்துக்கு அனுப்பிவைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை வரை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.22.86 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

