பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டம்: 30 போ் கைது

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நடைபெற்ற பூட்டுப் போடும் போராட்டத்தின்போது, போலீஸாருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:30 am IST

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நடைபெற்ற பூட்டுப் போடும் போராட்டத்தின்போது, போலீஸாருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் புதன்கிழமை கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அங்கு திரண்டவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மோகன் தலைமையில் போராட்டக்காரா்கள் தடைகளை மீறி கடைக்கு அருகே சென்று பூட்டுப் போட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல் உதவி ஆணையா் பரவாசுதேவன் தலைமையிலான போலீஸாா், கட்சி நிா்வாகிகளை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், போலீஸாருடன் கட்சி நிா்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கடைக்கு முன்பாகச் சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து மோகன் கூறியதாவது:

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்றக் கோரி பல மாதங்களாகப் போராடி வருகிறோம். ஏற்கெனவே மூன்று முறை போராட்டத்தில் ஈடுபட்டபோது, கடைகளை அகற்றுவதாக உறுதியளித்தனா். எனினும், கடைகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளால் சாலையில் செல்லும் பொதுமக்களும் பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே, கடைகளை அகற்றாவிட்டால் தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.