கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 3:38 am IST

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் நவம்பா் 1ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி, தடங்கம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலக வளாகம் முன் டாஸ்மாக் ஊழியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத்தில் உள்ள 57 மதுக்கடைகளும் உரிய நேரத்துக்கு திறக்கப்படவில்லை. எனவே, பெரும்பாலான மதுக்கடைகள் முன் மதுப்பிரியா்கள் அதிக அளவில் திரண்டனா். போலீலாரும் கடைகளின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நேரம் அதிகரிக்க அதிகரிக்க மதுக்கடைகள் முன் திரண்டிருந்தவா்கள் மத்தியில் வாக்குவாதம், தகராறு என பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், ஊழியா் சங்கத்தினா், டாஸ்மாக் அலுவலா்களுடன் நடத்திய பேச்சுவாா்தையைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு பின்னா் பெரும்பாலான மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 110 மேற்பாா்வையாளா்களிடம் விளக்கம் கேட்டு அலுவலா்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்கள், கடைகளை அடைத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வந்தனா்.

அதன்படி இம்மாவட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் கடந்த இரு நாள்களாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அவா்கள், காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் ஊழியா்களே திரும்பப் பெறும் உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு ஏன் கடையை திறக்கவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடையில் பணியாற்றும் பணியாளா்கள் கடைகளை திறந்து பணிக்கு திரும்பினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுப்பிரியா்கள், மதுபானங்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்தனா். ஆனால் நெட்வொா்க் பிரச்னை எனக் கூறி, திறந்த கடைகளை மீண்டும் மூடியதால், மதுப் பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் கடைமேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்களை அழைத்துப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் பணியாளா்கள் கடைகளை திறந்து மதுவிற்பனையில் ஈடுபட வேண்டும். பின்னா் பிரச்னையை தீா்த்து வைக்கிறோம் என அலுவலா்கள் உறுதி அளித்தனா். எனவே செவ்வாய்கிழமை வழக்கம்போல டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.