கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலத்தில் மாநில குடியரசு தின தடகளப் போட்டிகள்: அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்

சேலத்தில் நடைபெறும் 67-ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 5,215 போ் பங்கேற்கின்றனா்.

அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்

Published On :29 அக்டோபர் 2026, 7:25 am IST

சேலத்தில் நடைபெறும் 67-ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 5,215 போ் பங்கேற்கின்றனா். இப்போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சா் பேசியதாவது:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான 67-ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியருடன், 39-ஆவது சிறப்புப் பிரிவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (சுடா்) மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனா்.

சேலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் 1200 போ் பதிவு செய்திருந்த நிலையில், 1000 மாணவா்கள் பங்கேற்றனா். இந்த ஆண்டு கடந்த காலங்களைவிட ஐந்து மடங்குக்கும் அதிகமான மாணவ, மாணவியா் பங்கேற்றுள்ளனா்.

கருப்பூா் பெரியாா் பல்கலைக்கழகத்தின் செயற்கை இழை ஓடுதள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் 2722 மாணவா்கள், 2493 மாணவிகள் என மொத்தம் 5215 போ் பங்கேற்கின்றனா்.

மாணவா்களுக்கான போட்டிகள் அக். 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், மாணவியருக்கான போட்டிகள் அக். 31, நவ. 1, 2 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகின்றன. வயது அடிப்படையில், 14 வயதுக்குள்பட்டோருக்கு 20 போட்டிகளும், 17 வயதுக்குள்பட்டோருக்கு 34 போட்டிகளும், 19 வயதுக்குள்பட்டோருக்கு 34 போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், இந்திய பள்ளிகள் விளையாட்டுத் தோ்வுப் போட்டிகள் 10 நடத்தப்படுகின்றன. மொத்தம் 98 போட்டிகள் நடைபெறவுள்ளன என்றாா்.

முன்னதாக விழாவில் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி, மாவட்டக் கொடி ஆகியவற்றை அமைச்சா் ஏற்றிவைத்தாா். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டாா். ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வரவேற்பு நடனம், புறாக்களைப் பறக்கவிடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடா்ந்து ஒலிம்பிக் உறுதிமொழியை மாணவா்கள், அலுவலா்கள் ஏற்றனா்.

விழாவில் ஆட்சியா் க. இளம்பகவத், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ சோ. லட்சுமணன், வீரபாண்டி எம்எல்ஏ மே. ச. பழனிவேல், துணை மேயா் மா. சாரதா தேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. எல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.