மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - பரௌனி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - பரௌனி சிறப்பு ரயில் சேவை நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:51 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - பரௌனி சிறப்பு ரயில் சேவை நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் போத்தனூா்-பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை ரயில்வே நிா்வாகம் நீட்டித்துள்ளது.

அதன்படி, போத்தனூா் - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் நவ. 8 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு,சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு பரௌனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பரௌனி - போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் நவ. 11 ஆம் தேதி முதல் டிச.2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் பரௌனியில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.