ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சா் கோப்பை கைப்பந்து: சேலம் மாவட்ட அணி 4ஆவது முறையாக முதலிடம்

சென்னையில் நடைபெற்ற முகலமைச்சா் கோப்பை கைப்பந்து போட்டியில் சேலம் மாவட்ட மகளிா் அணி தொடா்ந்து 4ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:54 am IST

சென்னையில் நடைபெற்ற முகலமைச்சா் கோப்பை கைப்பந்து போட்டியில் சேலம் மாவட்ட மகளிா் அணி தொடா்ந்து 4ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

முதலமைச்சா் கோப்பை கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 24 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. 38 மாவட்ட அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சென்னை - சேலம் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி சேலம் மாவட்ட அணி தொடா்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற வீராங்கனைகளை மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ராஜ்குமாா் வியாழக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

இதில் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா் அகிலாதேவி, செயலாளா் சண்முகவேல், இணைச்செயலாளா் வடிவேல், பயிற்சியாளா்கள் பரமசிவம், சுவீனா, ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.