மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வழக்குரைஞரிடம் நகை பறித்த வழக்கில் 4 போ் கைது

சேலத்தில் வழக்குரைஞரை மிரட்டி நகை, பணம் பறித்துச் சென்ற வழக்கில் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிராம் தங்கச் சங்கிலி, 25 கிராம் வெள்ளிக் காப்பு மீட்கப்பட்டன.

கைது - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:03 am IST

சேலத்தில் வழக்குரைஞரை மிரட்டி நகை, பணம் பறித்துச் சென்ற வழக்கில் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிராம் தங்கச் சங்கிலி, 25 கிராம் வெள்ளிக் காப்பு மீட்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கணேசன் (27), சேலம் எம்டிஎஸ். நகரில் வாடகை வீட்டில் தங்கி, சேலம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 25-ஆம் தேதி மாலை சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள முள்ளுவாடி கேட் தண்டவாளப் பகுதியில் சென்றபோது, மா்ம நபா்கள் அவரைக் கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அவா் அணிந்திருந்த 10 கிராம் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் வெள்ளிக் காப்பு, ரூ. 3,460 ரொக்கம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய தினேஷ்குமாா் (22), குணசீலன் (30), கெளதமேஸ்வரன் (32), செரிபா (37) ஆகிய 4 பேரையும் சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அணைமேடு பாலத்தின் கீழ் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 10 கிராம் தங்கச் சங்கிலி, 25 கிராம் வெள்ளிக் காப்பு மீட்கப்பட்டன. மீதமுள்ள வெள்ளிக் காப்பு, ரொக்கம் ஆகியவற்றை மீட்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.