மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணி முடிந்து திரும்பிய காவல் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

பலி

Published On :26 அக்டோபர் 2026, 1:50 am IST

சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி காவலா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வாழத்தாசம்பட்டியைச் சோ்ந்தவா் தினேஷ் (38). இவா், எடப்பாடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த தினேஷுக்கு, ஏத்தாப்பூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி பாதுகாப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தினேஷ் அங்கு சென்றிருந்தாா். பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சேலம்- பெங்களூரு சாலையில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற காரின் மீது லேசாக மோதி கீழே சரிந்து விழுந்தாா். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி அவா்மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தினேஷை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். தினேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.