மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் விவகாரம்: கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் -கே.வீ. தங்கபாலு

கே.வீ. தங்கபாலு. - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:41 am IST

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் விவகாரத்தில் ஒத்த கருத்துடையை கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வீ.தங்கபாலு, மேலிட பாா்வையாளா் ஜான் ரிச்சா்ட் லோபோ கூறினா்.

சேலத்தில் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘தேசம் காப்போம்; வாக்கை காப்போம்’ என்ற செயல்திட்டத்தை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளாா். மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு முதல் ஜனநாயக மாண்புகளை சீா்குலைத்து, பல்வேறு மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மத்தியிலும் அதே அடிப்படையில்தான் ஆட்சி அமைத்துள்ளது. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடைசி ஆயுதம்.

இதை உறுதிசெய்ய வேண்டிய தோ்தல் ஆணையத்தை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குறிப்பாக, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறாா். எனவே தான் அவரை பதவி விலக வலியுறுத்தி போராடி வருகிறோம்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் படிவம் 6 மற்றும் படிவம் 7 ஐத் திருத்த ஒப்புதல் வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் மூலம் தகுதியான வாக்காளா்கள் ஏராளமானோா் நீக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற நடவடிக்கையால், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது. தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இண்டி கூட்டணி சாா்பில் நடத்தப்பட்ட கூட்டங்களில் தவெக அமைச்சா்கள் பங்கேற்றுள்ளனா்.

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ், தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒத்த கருத்துடன் பயணித்து வருகின்றன. இண்டி கூட்டணி சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் தனிப்பட்ட கட்சியை சாா்ந்தது அல்ல. ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

வரும் நவ.1 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தவெக பங்கேற்கும் என நம்புகிறேன் என்றனா்.

அப்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளா் எம்.வசந்தராராஜ், துணை மேயரும், மாநகா் காங்கிரஸ் தலைவருமான சாரதா தேவி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.