மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தாா்.

எடப்பாடி பழனிசாமி

Published On :24 அக்டோபர் 2026, 12:12 am IST

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சியில் சிறப்பு பெற்ற முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 146 அடி உயரம் கொண்ட முருகன் அருள்பாலித்து வருகிறாா்.

இக்கோயில் கிழக்கு நுழைவாயிலில் திருப்பணிகள் நடைபெற்று ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கான மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

இதையொட்டி, சிறப்பு யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள 146 அடி உயர வெற்றிவேலுக்கு பாலபிஷேகம் செய்து, மூலவா் சந்நிதானத்தில் நடைபெற்ற மகா தீபாராதனையில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தாா்.

இதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), அ. நல்லதம்பி (கெங்கவல்லி), வெங்கடாசலம் (மேட்டூா்), வே.சம்பத்குமாா் (அரூா்) மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.