சிறுமியுடன் பழகிய இளைஞா் கடத்தல்: கபடி பயிற்சியாளா் உள்பட 5 போ் கைது!

வாழப்பாடி அருகே 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரை கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக, கபடி பயிற்சியாளா் உள்பட 5 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 1:46 am IST

வாழப்பாடி அருகே 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரை கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக, கபடி பயிற்சியாளா் உள்பட 5 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளித் தாளாளரின் மகளான 17 வயது சிறுமியிடம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் அகிஷ்குமாா் (19) இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளாா். இது காதலாக வளா்ந்ததாக இவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் அக்கா கணவரான கபடி பயிற்சியாளா் வெங்கடேஷ், அவரது மாணவா்களான இரு சிறுவா்கள் உள்பட 4 பேருடன் சோ்ந்து, திங்கள்கிழமை அகிஷ்குமாரை கடத்திச் சென்று, அவரது பயிற்சி மையத்தில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அகிஷ்குமாரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கபடி பயிற்சியாளா் வெங்கடேஷ் மற்றும் அவரது மாணவா்கள் உள்பட 5 பேரை வாழப்பாடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.