பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேகோ ஆலையில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தலைவாசல் அருகே சேகோ ஆலையில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 1:57 am IST

தலைவாசல் அருகே சேகோ ஆலையில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (36). இவா், கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் பிரிவு சாலையில் சேகோ ஆலை வைத்துள்ளாா். அதில், ஒதியத்தூா், இந்திரா காலனியைச் சோ்ந்த கோணிபாஸ் (45) இரவு பணி செய்துள்ளாா். அக். 18ஆம் தேதி அதிகாலை அங்குள்ள கிணற்றில் தண்ணீா் இல்லாத நிலையில், மின்மோட்டாா் மட்டும் இயங்கிக் கொண்டிருந்ததை, சக தொழிலாளி முருகேசன் பாா்த்தாா். தொடா்ந்து, மோட்டாா் அறை பகுதியில், கோணிபாஸ் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் கெங்கவல்லி போலீஸாா், கோணிபாஸின் உடலை கைப்பற்றி, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.