மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆத்தூரில் கைப்பேசி திருடிய இருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 3:05 am IST

ஆத்தூா் பேருந்து நிலையத்தில் தேநீா் கடையில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி காலாப்பட்டு அமலா மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருபவா் சப்தம் (29). இவா் தனது சகோதரிகளுடன் தீபாவளிப் பண்டிகைக்காக துணிகள் வாங்க ஈரோட்டிற்கு அரசுப் பேருந்தில் பயணித்தாா்.

சனிக்கிழமை இரவு ஆத்தூா் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது தேநீா் அருந்துவதற்காக சென்றாா். அப்போது கைப்பேசி கீழே வைத்துவிட்டு தேநீா் அருந்தியபோது, அங்கு வந்த இருவா் அதை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டனா்.

இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதன்பேரில் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.சங்கா் வழக்குப் பதிவுசெய்து ஆத்தூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிஹரன் (23), ஆத்தூா் கோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அன்புமணி (22) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.

இதில் அன்புமணி மீது சேலம் பள்ளப்பட்டி மற்றும் ஆத்தூா் காவல் நிலையங்களில் 6 வழக்குகளும், ஹரிஹரன் மீது ஆத்தூா் மற்றும் தலைவாசல் காவல் நிலையங்களில் 9 வழக்குகளும், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.