நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் புதுக்கல்: இளைஞா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 2:45 am IST

மேட்டூா் அருகே மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள மல்லிகுந்தம் நரியனூரைச் சோ்ந்தவா் பூபாலன் (30). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் சேகா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் அந்த மளிகைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். இதில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 13 கிலோ பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், கடை உரிமையாளா் பூபாலனை கைது செய்தனா். பூபாலனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.